Friday 4 October 2019

Thank you Messages for Teachers

ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்..!

Thank you Messages for Teachers
Thank you Messages for Teachers

அன்புள்ள ஆசிரியர்
நீங்கள் மிகவும் புத்திசாலி..!
மற்றும் அறிவு நிறைந்தவர்..1
நீங்கள் எப்போதும் வாழ்க்கையின் சரியான
 பாதைகளை எனக்கு வழிகாட்டியிருக்கிறீர்கள்..!
மகிழ்ச்சியின் மகிழ்ச்சியை சொல்ல விரும்புகிறேன்
இந்த ஆசிரியர் தினத்தில்!!

ஆசிரியர் என்பது அனைவருக்கும்
அறிவைப் பெற எப்போதும் உதவுவதோடு,
மாணவர்களுக்கு பிரச்சினைகள் இருக்கும்போது
எப்போதும் அவர்களுக்கு அருகில்
நிற்கும் ஒரு நபர். அதற்காக நன்றி மேடம் / ஐயா.
இனிய ஆசிரியர் தின நல்வாழ்த்துகள்..!

Happy Teacher’s Day!


வீர வணக்கங்கள் சமர்ப்பணம்..! 

என்னை எனக்கே யாரென்று
அறிமுக படுத்திய பெருமை
என் ஆசிரியர் உங்களையே சாரும்..!

எங்கள் ஒவ்வொரு செயலிலும் நின்று
நல்வழி படுத்தினீர்கள்
எங்கள் ஒவ்வொரு குறும்புகளையும்
சகித்து கொண்டீர்கள்
எங்கள் கிண்டல் பேச்சுக்களையும்
பொறுத்து கொண்டீர்கள்
நாங்கள் அறிவோம்
நீங்கள் எவ்வளவு தொலைவில் இருந்து
பள்ளிக்கு வருவீர்கள் என்று..!
நாங்கள் உணர்ந்தோம்
நீங்கள் எவ்வளவு கஷ்டங்களை
எங்களால் அடைந்தீர்கள் என்று..!

உங்கள் குடும்பங்களை விட
அதிகமாய் எங்களை நேசித்ததை
இன்று எங்களால் உணர முடிகின்றது..!
எத்தனை ஆயிரம் ஆசிரியர்கள் இருந்தாலும்
உங்களின் நோக்கம் லட்சியம் கனவு எல்லாமே
தன் மாணவர்களின் எதிர்காலம் ஓன்று தான்..!

மழையின் அருமை தெரியாமல்
ஓடி மறைபவர்களை போல
உங்களை கண்டு ஓடி மறந்தோம்
மழையின் அருமை புரிந்தோம்
ஆனால் உங்களின் அருமை
இப்போது தான் உணர்ந்தோம்..!

எங்கள் எதிர்காலத்தை சிறப்பாக்கிய
சிந்தனை சிற்பிகளுக்கு
எங்கள் வணக்கங்கள் சமர்ப்பணம்..!
கல்லும் உடையாமல் சிலையும் சிதறாமல்
இந்த கற்களை சிற்பங்களாகிய
சிற்பிகளாகிய ஆசிரியர்களுக்கு
எங்கள் வீர வணக்கங்கள் சமர்ப்பணம்..!

Happy Teacher’s Day!

No comments:

Post a Comment

Popular Posts