Sunday 8 September 2019

Diwali kavithai in Tamil..!

இனி விடியட்டும் தீபாவளி!

Happy Diwali Wishes in Tamil
Happy Diwali..!

அதிரடி பட்டாசு சத்தம்
கலர் கலராய் மத்தாப்பு வெளிச்சம் 
அரக்க பறக்க எண்ணெய் குளியல்
பளபளக்கும் புதுத்துணி
கமகமக்கும்  நறுமண வாசனை
நமது வீடடின் தீப ஒளி 
அடுத்த வீட்டின் நெய் பண்டம்
ஆங்காங்கே வெடி சத்தம்
அழகான பெண்கள் கூட்டம்
கிடைக்காத புது பட டிக்கெட்
நிற்காத ரசிகர்கள் சத்தம்
சிரிக்க வைக்கும் பட்டிமன்றம்
அழுக வைக்க நாடகங்கள்
ட்விட்டரில் ஹாஷ்டாக்
வாட்ஸ்அப்பில் ஸ்டேட்டஸ் 
நிற்காத மொபைல் ரிங்க்டோன் 
அவ்வப்போது மெஸேஜ் வாழ்த்து
சளைக்காத நண்பர்கள் கூட்டம்
கலைநிகழ்ச்சி ஆட்டம் பாட்டம் 
கொஞ்சம் கோபம் கொஞ்சி போகும்
நிறைய மகிழ்ச்சி நிறைத்து வரும்
எரிந்து போன நரகாசுரன்
எரிச்சல் நீங்க ‘கங்கை குளியல்’
இனி விடியட்டும் தீபாவளி!
இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்!!


ஒளிரட்டும் தீபாவளி..! 

எட்டுத்திக்கும் எட்டட்டும்
சந்தோச ஒலி சத்தம்
கண்ணை பறிக்கும் மத்தாப்பு வெளிச்சம்
காதை பிளக்கும் வெடி சத்தம்
வாசலெங்கும் வண்ணக்கோலம்
திண்ணையெங்கும் தீபஒளி
வீடுகளில் நெய் பண்டம்
வீதிகளில் வாசனை மணக்கும்
பளபளக்கும் புத்தாடை
குழந்தைகளை அலங்கரிக்கும்
குழப்பம் நிறைந்த மனதிலும்
குதுகுலமாய் ஒளிரட்டும் தீபாவளி..!

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!


எட்டு திக்கும் கேட்கட்டும்..!

ஆண்டுதோறும் வரும் தீப ஒளிவெள்ளத்தில்
துன்பம் தொலைவில் போகட்டும்
இன்பம் எளிதில் கிடைக்கட்டும்
வெடிச்சத்தம் எட்டு திக்கும் கேட்கட்டும்
ஒளிவெள்ளம் வானம் வரை எட்டட்டும்
சூழ்ச்சி சூறாவெளியாய் விலகட்டும்
தீமை தீண்டாமல் போகட்டும்
நன்மைகள் பல பெற
கொண்டாடி மகிழ்வோம்
இனிய தீபாவளியை..!

இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்..!


ADVANCE HAPPY DIWALI

ஆளாளுக்கு இப்படி பேசாம
இருந்தா எப்படி…???
இன்னும் கொஞ்சம்
நாள் தான் இருக்கு!!!
யாராவது Advance Wishes
ஆரம்பிங்கப்பா…
நானே ஆரம்பிக்கிறேன்

***ADVANCE HAPPY DIWALI***