சிறகடித்து நீ பறக்க..!
Kadhal Love kavithai in Tamil |
வானவில்லாய் நீ வந்தால்
வண்ணமாக நான்,
அழகாய் நீ இருக்க..!
மானாய் நீ வந்தால்
காடாக நான்,
துள்ளி குதித்து நீ ஓட..!
மயிலாய் நீ வந்தால்
தோகையாக நான்,
அழகாக நீ ஆட..!
பட்டாம்பூச்சியாய் நீ வந்தால்
சிறகாக நான்,
சிறகடித்து நீ பறக்க..!
காதலி மடியில்..!
முதல் முறையாக
மடியில் தலை வைத்து
படுக்க வேண்டுமென்ற போது
என் என்று கேட்டாய்..!
அப்படியெல்லாம் ஒன்றுமில்லை
காதலி மடியில்
படுத்து உறங்க வேண்டுமென்பது
என் ரொம்ப நாள் ஆசை
அது உன் மடியாயிற்று..!
அவ்வளவு தான்..!