Saturday 6 December 2014

Sema Varigal..!

என்னால் தான் வர வரும் ..!

Love kavithaigal in tamil
Love kavithaigal in tamil

உன் கண்களிலிருந்து 
கண்ணீர் வர வேண்டும்
சோகத்தினாலோ
வலியினாலோ அல்ல     
சந்தோசம் தாங்கமுடியால் ..!

ஆனால்
நீ சிந்தும்
ஒவ்வொரு துளியும்
என்னால் தான் வர வரும் ..!

வீசும் திசையெல்லாம்..!

திசை தெரியாமல்
அலையும் பைத்தியக்காரனை போல
என் மனம்
அலைந்து தெரிகின்றது
உன் சுவாச காற்று
வீசும் திசையெல்லாம்..!

கார்த்திகை திருநாளில்...!

ஒரு கார்த்திகை திருநாளில் 
நீ  எண்ணெய் ஊற்றி 
விளக்கேற்றினாய்..!
உன் பிம்பம்
என் இதயத்தில் ஏறியது
தீப ஒளியாக ..!

Nam Kadhal..!

நம் காதல்..!

Tamil Kadhal Kavithaigal
Tamil Kadhal Kavithaigal

நீ தூங்குகிறாய்
எல்லா அழகுகளுடனும் ..!
நான் ரசிக்கிறேன்
நிறைய கனவுகளுடன்..!

உன் கண்களை மூடி
என் மனதால் கனவு
காண்கிறது நம் காதல்..!


Painful Line..!

அன்பே,
நீ கோபமாய் பேசி சென்றாய்..!
உன் நினைவுகள்
சாந்தமாய் கொல்கின்றன..!
நீ பேசி கொடுத்த
வலியை விட உன் நினைவுகள்
அதிகமாய் கொடுக்கின்றன..!


உன் கூந்தல்..!

பெண்களின் கூந்தலில்
பூவாசனை வீசும்
அது உலகிற்கு தெரியும்..!

இந்த பூவிலோ
உன் கூந்தல்
வாசனையல்லவா
வீசுகிறது..!

Tamil love Sms Kavithai..!

புதைந்தது கிடக்கின்றன..!

Tamil love Sms Kavithai in Tamil
Tamil love Sms Kavithai in Tamil

நீ என் கண்களுககுள் 
இருக்கையில்
எனக்கொரு
சின்ன சந்தேகம் உண்டு..!

எவ்வளவு துரு துருவான 
பெண் நீ
இப்படி அடக்கமாய் 
இருக்கிறாய் என..!

பாரேன்,
இந்த காதலுக்குள்ளும் 
உனக்குள்ளும்
என்னென்னவெல்லாம் 
புதைந்தது கிடக்கின்றன..!


பதிவு செய்ய..!

அன்பே..!
உன் வரவை எதிர்நோக்கி
இமை இமைக்காமல் என் விழிகள் 
காத்து கிடக்கின்றன..!
உன் பிம்பத்தை படமெடுத்து 
என் இதயத்தில் பதிவு செய்ய..!


உணர முடியும்..!

பெண்ணே,
காதலால் வரும் வலிகளை
வெறும் வார்த்தைகளை கொண்டு 
சொல்லி விட முடியாது..!
அது கதை அல்ல
கருப்பு காவியம்..!
அதை நீ சந்தித்தால்
மட்டுமே உணர முடியும்..!

Sweet Love Line..!

தாங்க முடியாது உன்னால் ..!

Kadhal(Love) kavithai in Tamil
Kadhal(Love) kavithai in Tamil

உன் புருவங்களின் நெளிவுகளிருந்து 
இதழ்களின் அழகிலிருந்து
கூந்தலின் அசைவிலிருந்து
கொலுசுகள் சிணுங்களிலிருந்து
நான் கற்று கொண்ட
உனக்கான காதலை
உன்னிடம் தர ஆரம்பித்தால்
தாங்க முடியாது உன்னால் ..!

ஒரு கருவானது..!

அன்பே,
நீயும்  நானும்
நம் காதலுக்க்கான
கவிதை வடித்தோம்..!
உன் பெயரை நானும்
என் பெயரை நீயும் வரைந்ததால்
இரண்டு வார்த்தை கவிதை
ஒரு கருவானது..!

நீயும் ஆவாய் ..!

இந்த காதல்  மட்டும் வந்தால் போதும் ..!
நதியாக அவளும், கரையாக நீயும்
விரலாக அவளும், நாகமாக நீயும்
கவிதையாக அவளும், கற்பனையாக நீயும்
விழியாக அவளும், இமையாக நீயும்
முத்தமாக அவளும், சப்தமாக நீயும் ஆவாய் ..!