சந்தோசம்
Sentiment Tamil Kavithai |
சந்தோசமே நீ யார்?
குழந்தை ஓன்று பிறந்தால் சந்தோசம்
குழந்தை வேண்டாமென்று தள்ளி போட்டாலோ ஒரு வித சந்தோசம்
குழந்தைகள் சிரித்தால் சந்தோசம்
குழந்தைகள் நம் கையை கடித்தாலோ ஒரு வித சந்தோசம்
சந்தோசமே நீ யார்?
சிறுவயதில் ஓடி விளையாடினால் சந்தோசம்
பள்ளி செல்ல மறுத்து ஓடி ஒளிந்து
அம்மாவை அலைய விட்டாலோ ஒரு வித சந்தோசம்
பள்ளியில் படித்து நல்ல மார்க் எடுத்தால் சந்தோசம்
படிக்காமல் மதிப்பெண் அட்டையில் கையெழுத்து போட்டாலோ ஒரு வித சந்தோசம்
மண்ணில் குழி பறித்து விளையாடினால் சந்தோசம்
குழி தோண்டி பாட்டி தாத்தாக்களை விழ வைத்தாலோ ஒரு வித சந்தோசம்
சந்தோசமே நீ யார்?
+2 வில் சேர்ந்து ஜாலி செய்தால் சந்தோசம்
வகுப்பு ஆசிரியரை கேலி செய்தாலோ ஒரு வித சந்தோசம்
படித்து பள்ளியில் முதல் மதிபெண் பெற்றால் சந்தோசம்
பொருட்களை உடைத்து அபராதம் கட்டினாலோ ஒரு வித சந்தோசம்
சந்தோசமே நீ யார்?
கல்லூரியில் அரியர் போடாமல் படித்தால் சந்தோசம்
கல்லூரிக்கு போகாமல் கட் அடித்து
சினிமா சென்றாலோ ஒரு வித சந்தோசம்
கல்லூரியில் பீஸ் கட்ட பணம் கேட்டு அம்மா தந்தால் சந்தோசம்
அதிகமாக பணம் கேட்டு மீதியை
செலவு செய்தாலோ ஒரு வித சந்தோசம்
சந்தோசமே நீ யார்?
திருவிழாவிற்கு புது சட்டை எடுத்தால் சந்தோசம்
திருட்டுத்தனமாக அப்பா சட்டையிலிருந்து
பணம் எடுத்தாலோ ஒரு வித சந்தோசம்
ஒளிந்து நின்று சைட் அடித்தால் சந்தோசம்
ஒளிந்து ஒளிந்து வீட்டுக்கு தெரியாமல்
சிகெரெட் அடித்தாலோ ஒரு வித சந்தோசம்
கல்லூரியில் அதிக மதிப்பெண் பெற்றால் சந்தோசம்
கல்லூரிக்கு மது அருந்தி விட்டு வந்தாலோ ஒரு வித சந்தோசம்
சந்தோசமே நீ யார்?
மலர்ந்த காதல் என்றாவது கைகூடினால் சந்தோசம்
கழற்றி விடுவதற்கென்ற காதல் செய்தால் ஒரு வித சந்தோசம்
படித்து வேலைக்கு வெளிநாடு சென்றால் சந்தோசம்
குடிக்க வெளிநாட்டு சரக்கு கிடைத்தாலே ஒரு வித சந்தோசம்
குடும்பத்துக்காக உழைத்து பணம் சேர்த்தால் சந்தோசம்
குடும்பத்தை உதைத்து பணம் பறித்தாலோ ஒரு வித சந்தோசம்
சந்தோசமே நீ யார்?
மனைவியோடு இல்லறம் கொண்டு குழந்தை பெற்றால் சந்தோசம்
பெற்ற குழந்தையோடு மனைவியை வெளியே விரட்டினாலோ ஒரு வித சந்தோசம்
சீட்டு போட்டு வீடு கட்டினால் சந்தோசம்
சீட்டு விளையாடி வீட்டை விற்றாலோ ஒரு வித சந்தோசம்
துணையோடு புரிதல் கொண்டு தொலைதூரம் வாழ்ந்தால் சந்தோசம்
தொல்லையே வேண்டாமென்று
விவாகரத்து வாங்குவதோ ஒரு வித சந்தோசம்
சந்தோசமே நீ யார்?
எல்லோரிடமும் அனுசரித்து வாழ்ந்தால் சந்தோசம்
எவனுமே வேண்டாமென்று வாழ்வதிலோ ஒரு வித சந்தோசம்
மாமன் மாமியாரை மதித்து மரியாதையாக நடத்தினால் சந்தோசம்
மாமன் மாமியாரை மிதித்து பட்டினி போடுவதோ ஒரு வித சந்தோசம்
தாய் தந்தையை சொத்து போல பேணிகாப்பாற்றினால் சந்தோசம்
சொத்து கிடைத்ததும் தாயை
தெருவில் காக்க வைப்பதோ ஒரு வித சந்தோசம்
சந்தோசமே நீ யார்?
கருவிலிருந்து கல்லறை வரை எல்லா செயலிலும் சந்தோசமே
சந்தோசமே உனக்கு உணர்ச்சி உண்டா?
நீ மட்டும் சந்தோசமாக இருந்தால் போதும் என்கிறாயா?
அடுத்தவரை, குடும்பத்தை, சமுதாயத்தை, நாட்டை காயப்படுத்தாத
சந்தோசம் உனக்குள் உண்டா?