Monday 1 June 2020

ஒரு குழந்தையும்..! ஒரு குட்டியும்..!

New born baby kavithai
Newborn baby kavithai

குழந்தை பிறந்த உற்சாகத்தில்..! 

அலுங்காது குலுங்காது,
அரை அடி தூரம் நகராது,
தூங்காது துவளாது,
பொத்தி பொத்தி பொன்போல் பொதிந்த
பத்தரை மாதத்து தங்கம்,

பனிக்குடம் உடைத்து,
படிவாசலில் அடியெடுத்து
அவதாரமாய் அவதரிக்கும் போது,

அன்பு கரத்தால் அரவணைத்து,

முக்கி முனகி,
முடிந்தவரை போராடி,
மூச்செல்லாம் வீணாகி,
பெரும்பாடு பட்டு பெற்றெடுத்த
தன் மாணிக்கத்தை மரதகத்தை,

அவள் கைகளிலே கொடுக்கும்போது,
அவளடையும் ஆனந்தத்தை ,
எந்த ஒரு அளவுகோலாலும் அளவிட முடியாது!!!

கொரனாவின் கொடிய முகத்தையே பார்த்து கொண்டிருந்த எங்களுக்கு,
பிஞ்சு குழந்தையின் கொஞ்சும் முகத்தை பார்க்கும்போது,
கொஞ்சம் வாழ்ந்து பார்க்கலாம் என்ற ஆசை இருக்கத்தான் செய்கிறது!!!

ராபின்சன் ராஜாகுமார்
அரசு மருத்துவர்


ஒரு யானை குட்டியின் கண்ணீர்..!

ஒரு யானை குட்டியின் கண்ணீர்..!
ஒரு யானை குட்டியின் கண்ணீர்..!


அம்மா அழுகிறாயா ..!

இதுவரை எனக்கு பிடித்த உணவை எல்லாம் வழங்கினாயே ..
இரண்டு நாட்களாய் ஏன் இந்த மயான அமைதி ..
எவ்வளவு தண்ணீரை தான் தின்று தீர்ப்பாய் .. 
பைனாப்பிள் வாசனை வந்ததே , அதை ஏன் என் வயிற்றுக்கு கொண்டு வர வில்லை ..

அம்மா ஏன் அழுகிறாய் ..!

இந்த குளத்திலேயே நிற்க்க வேண்டும் என்றும் அப்படி என்ன பிடிவாதம் உனக்கு ..
எங்கோ இரத்த வாடை வருகிறது உன் தும்பிக்கை வழியே நானும் நுகர்கிறேன் ..
அம்மா ஏதாவது வேட்டை விலங்கு நம்மை நெருங்கி வருகிறதா ..
வாயை தான் திறயேன் , அப்படி என்ன தான் கோவம் என் மீது ..

அம்மா பயமாக இருக்கிறது ..!

மனிதர்கள் தான் இருக்கிறார்களே நம்மை அந்த வேட்டை விலங்கிடம் இருந்து காக்க 
அம்மா மூச்சி விட சிரமமாக இருக்கிறது..
என்னதான் ஆனது உனக்கு .. 

அம்மா வாயை திறயேன் , உள்ளிருக்கும் இருட்டும்  , உன் அமைதியும் என்னை கொல்கிறது .. 
அம்மா நானும் அழுகிறேன் எனக்கு ஏன் நீ பைனாப்பிள் தரவில்லை ..

மனிதன் என்னும் மிருகம் அழிந்து இயற்கை உலகை கைபற்றட்டும் 🙏

- ஜெகதீஷ் ரவி